2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

நெல்சன் மண்டேலா காலமானார்

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இன்று காலை காலமானார். உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 95ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். இவரது மரணம் அமைதியான மரணமென தற்போதைய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள மண்டேலாவின் இல்லத்தில் வைத்தே அவர் உயிரிழந்தார். அவர் உயிர் துறக்கும் தருவாயில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மண்டேலா வைத்தியசாலையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம்தான் வீடு திரும்பினார். வீடு திரும்பியதில்ருந்து அவரது இல்லத்திலேயே அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, தனது தந்மை அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று உயிரிழிந்தார்.

நெல்சன் மண்டேலா...

1918: கிழக்கு கேப்பில் பிறந்தார்.

1943: ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

1956: தேசத் துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

1962: கலவரத்தைத் தூண்டியமை, கடவுச்சீட்டு இன்றி நாட்டைவிட்டு வெளியேறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.

1964: நாசவேலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

1990: சிறையிலிருந்து விடுதலை.

1993: அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994: தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999: தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

2001: ப்ரொஸ்டேட் புற்று நோயால் பீடிக்கப்பட்டார்.

2004: பொது வாழ்விலிருந்து விலகினார்.

2005: தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--