2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இலங்கை மீதான கவனயீனம்; ஐ.நா.வின் முறைமையே காரணம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமானப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்து பேசவோ அல்லது தேடிப்பார்க்கவோ முடியாமல் போனமையானது ஐக்கிய நாடுகள் சபையின் முறைமைக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும் என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் டுட்ஸி இனத்தைச் சேர்ந்த 8 இலட்சம் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 20 ஆண்டு நினைவு திங்கட்கிழமை (07) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, இந்தியாவிலிருந்து வெளிவரும் 'தி இந்து' பத்திரிகைக்கு பான் கீ மூன் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் தொடர்ந்தும் கூறியுள்ள ஐ.நா செயலாளர் நாயகம், 'இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமானப் போரின் உச்சகட்டமான 2009ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலைகள் தொடர்பில் தேடிப்பார்க்கவோ அல்லது அது குறித்து பேசவோ ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் முறைமைக்குள் ஏற்பட்ட பிரச்சினையே காரணமாகும்' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--