2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு எனது நன்றி: அசாத்சாலி

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியடைந்தமைக்கு எனது  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதி  போட்டியை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்களாதேஸிற்கு செல்லாமல் இருந்ததால்தான் இலங்கை அணியால் உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடிந்தது.  அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்' என ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

'இலங்கை அணியின் வீரர்கள் சங்கக்காரவும் மஹேல ஜயவர்தனவும் பாராட்டுக்குரியவர்கள் மட்டுமன்றி எமது நாட்டின் வெற்றிச் சின்னங்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில், புதன்கிழமை(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'இந்த நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், களவு, திருட்டு சம்பவங்களுக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஊழல் மோசடிகள் தொடர்பில் மில்லியன் கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றாலும் அதற்கு தீர்வுகள் இன்னும் பெற்றுகொடுக்கப்படவில்லை. ஆனால், நீதியுடன் நடந்தால்மட்டும் கைதுசெய்கின்றார்கள்.

வீடு உடைப்பு, மனித கொலை, திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. ஆனால் காரணமானவர்கள் தப்பிக் கொள்கின்றனர். நாட்டில் நல்லிணக்கம் காணாமல் போய்கொண்டிருக்கிறது. நாட்டை மீட்டுத்தர முடியாதநிலை தோன்றியுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

 • Jawahir Saly Thursday, 10 April 2014 02:15 AM

  பிரபல்யம் பெற‌ வேண்டும் என்பதற்காக தேவையற்ற எதையும் பேசக் கூடாது. அப்படி என்றால் றவூப் ஹக்கீம் அவர்கள் அங்கு போனதனால்தான் வெற்றி கிடைத்தது என நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வீங்களா?

  Reply : 0       0

  ABDUL Thursday, 10 April 2014 09:15 AM

  மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்த மார்க்கம் தீனுல் இஸ்லாமாகும். ஜனாதிபதி மைதானத்துக்கு சென்றால் இலங்கை தோல்வியடையும் என்பதை நம்பினால் அது ஈமானுக்கு பங்கம் விளைவிக்க கூடியதாகும். இதை ஒரு முஸ்லிம் அரசியல்வாதி பேசியிருக்க கூடாது.

  Reply : 0       0

  kavven Thursday, 10 April 2014 04:53 PM

  அசாத்சாலி சொன்னது 100% சரி...

  Reply : 0       0

  kavven Thursday, 10 April 2014 04:59 PM

  Jawahir Saly நீ ஒரு....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .