2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை தமிழர்களுக்கான ராஜீவின் தியாகத்தை மறக்க வேண்டாம்: சோனியா

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது,

இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?.

அருமை தலைவர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும்.

இங்கு வாழும் தமிழர்களுக்கு வீதிகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம்.

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்' என்று சோனியா காந்தி மேலும் கூறினார். (தினமலர்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--