2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ஒரு பாலின திருமண கோரிக்கை நிராகரிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஒரு பாலின திருமணத்தை சட்ட பூர்வமானதாக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரித்தானிய உதவிக்கான ஒரு நிபந்தனை என்ற வடிவில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாக, கொழும்பில் வியாழக்கிழமை(23) நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான  சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்காதென அவர் கூறினார். இலங்கையிலுள்ள ஆண், பெண் ஓரின சேர்க்கையாளர்களும் கடந்த பல வருடங்களாக தமக்கு அங்கீகாரம் கோரிவருகின்றனர்.

இவர்கள் தமது உரிமையின் பால் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வருடாந்தம் கொழும்பில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

  Comments - 0

  • ibnu aboo Thursday, 24 April 2014 03:26 PM

    இது கலாசார சீரழிவுள்ள நாடல்ல. மத பண்பாட்டு விழுமியங்கள் நிறைந்த நாடு. மனித உரிமை நாகரிகம் என்ற பெயரில் மேலைத்தேயம் அநாகரிகமான கேவலமான கலாசாரத்தை உருவாக்குகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--