2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ரயில்களை மறித்த ஐவர் நீக்கம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி ரயில்களை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாக கூறப்படும் ரயில்வே திணைக்களத்தைச்சேர்ந்த ஊழியர்கள் ஐவரும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஐவரும் பதிலீட்டுதொழிலாளர்களாகவே சேவையில் இணைந்துகொள்ளப்பட்டுள்ளனர். ரத்மலானை ரயில் கைத்தொழிற் சாலையில் கடமையாற்றியவர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அன்றையதினம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த ஐவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை நீதவான்; பிணையில் விடுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .