2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புலிக்கு உதவிய முன்னாள் ஐ.பி.க்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவியதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் பரிசோதகரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தேவிகா லிவேரா, நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் இருவருக்கு தங்குமிட வசதியை கொடுத்து, பாதுகாப்பு படையினரை செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு முயற்சித்தமை மற்றும் உதவியமை ஆகிய குற்றச்சாட்டுகளே அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள்; பொலிஸ் பரிசோதகர் அஜிமர் ஆவுட் மொஹமட் என்பரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர்களின் ஒருவரான மாயா மற்றும் மற்றுமொரு புலித்தலைவரான கனகலிங்கம் நிஷாந்தன் ஆகியோருக்கே இவர், 2007ஆம் ஆண்டு தங்குமிட வசதியை கொடுத்து உதவியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .