Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2015 ஜனவரி 28 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சம்மாந்துறையிலிருந்து ஆண்டாண்டு காலமாக தக்கவைக்கப்பட்டு வந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் சுமார் ஒரு தசாப்த காலமாக எம்மைவிட்டு சென்றுள்ளது. இதனால் சம்மாந்துறை மக்களாகிய நாங்கள் இன்று அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம் என சம்மாந்தறைப் பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
அதிபர் ஏ.ஏ.அமீர் தலைமையில் சம்மாந்துறையில் தற்போது இழந்துள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக, சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்களினதும் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (27) இரவு, அவருடைய மக்கள் பணிமனையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
இதனை நாம் 2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பெற்றாக வேண்டும். அதற்காக சம்மாந்துறை மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வாக்காளர்கள் இருந்தும் கடந்த ஒருதசாப்த காலமாக அந்த உறுப்புரிமைகளை இழந்து நிக்கின்றோம்.
சில ஆசாமிகளின் தேர்தல் கால குறுகிய வியாபார நோக்கம் காரணமாக, எமது உரிமைகளை இழந்து நிக்கின்றோம். இவ்வாறான குறுகிய மனம் படைத்தவர்களின் வியாபார நடவடிக்கைகளிலிருந்து எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாக்க வேண்டும்;.
சம்மாந்துறை மண் நல்ல புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் உலமாக்களையும் கொண்டு ஒரு இஸ்லாமிய கட்டுக்கோப்புக்குள் வாழுகின்ற ஊராகும், நாம் இன்னும் இன்னும் எமாருகின்றவர்களாக எமது பிரதிநிதித்துவத்தை இழந்து, ஏனைய பிரதேசங்களை வாழவைத்துக் கொள்ள நாம் இனி ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
இந்த விடயத்தில் எமது பள்ளிவாசல் நிர்வாகமும் எமது ஊரின் உயர் சபைகளான உலமா சபை, நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ;ஷ_றா போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்காக உழைக்க வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது ஊருக்கான நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ளக் கூடிய நூறுவீதமான வாய்புக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியூடாகவே எமக்கு உண்டு. அதனை நாம் பலப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago