2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நிஷா பிஸ்வால்-சொல்ஹெய்ம் பேச்சு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைப்பற்றி முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹொயிமுடன் பேசியுள்ளார்.

மோதல் நடந்த காலத்தில் ஷொல்ஹொயிம் சமாதான தூதுவாகவும் மத்தியஸ்தராகவும் செயற்பட்டவர். அவர் தற்போது இலங்கை விடயங்களை ஆவலுடன் கவனித்து வருகின்றார். உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பிஸ்வால் முதல் தடவையாக பெப்ரவரியில் இலங்கைக்கு வந்தார்.

இந்த சந்திப்பின் பின்னர் பிஸ்வால் தனது டுவிட்டர் செய்தியில் இலங்கைப்பற்றி பேசத் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்.
இலங்கையில் ஜனநாயகத்தையும் சகல இனங்களின் உரிமைகளையும் ஆதரிக்கும் முக்கிய பாத்திரத்தை அமெரிக்கக வகிப்பதாக செல்வொயிட் பில்வாவுடனான சந்திப்பின் பின்னர் கூறியுள்ளார்.

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை செயற்படுத்தல் தொடர்பில் அமெரிக்காவின் முனைப்பை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X