2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக வழக்கு

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல்கள் ஆணையாளர் கோராத நிலையில் இராணுவத்தினரை அழைத்தமைக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிஸ கட்சியினாலேயே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆயுத படைகளுக்கு பொலிஸாரின் அதிகாரங்களை வழங்கியே  இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அன்றிருந்த அரசாங்கம் 2011ஆம் ஆண்டு, அவரசகாலச்சட்ட ஒழுங்குவிதிகளை நீக்கியது. அவ்வாறு இருந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 12ஆம் பிரிவை பயன்படுத்தி முழு நாட்டையும் கவனிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரம், இராணுவம், கடற்படை மற்றும் விமான படையினருக்கு கையளிப்பதற்கு ஒவ்வொரு மாததும் கட்டளைச்சட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்தியது.

எனினும், அவரசகாலச்சட்டத்தை நீக்கியதன் ஊடாக ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாக காண்பித்து, உண்மையான இராணுவ அச்சுறுத்தல் விடுப்பதானது பிரஜைகளின் நிர்வாகத்துக்கு  அச்சுறுத்தல் விடுப்பதாக கடந்த அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்திருந்தது.

இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதான பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இராணுவத்துக்கு பொலிஸாரின் அதிகாரத்தை கொடுத்து முழு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையையும் அவர் மீறிவிட்டார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .