2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மைத்திரியை வரவேற்க ஆவல்: மோடி

Kanagaraj   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் வரவேற்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


அவர், தமிழ் மற்றும் சிங்கம் ஆகிய இரு மொழிகளிலும் தனது டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


'இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிறிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்'.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


'இலங்கை மக்களுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான நமது உறவு பிரிக்க இயலாத ஒன்றாகும்.'

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .