2021 மே 06, வியாழக்கிழமை

அமைச்சர் ஜோன் அமரதுங்க நடவடிக்கை எடுக்கவில்லை: நிமல்

Thipaan   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார, யொஹான் பெரேரா

பொதுப் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா, நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்தார்.

வத்தளை பிரதேச சபைத் தலைவர் மீதான தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியே, எதிர்க்கட்சித் தலைவர் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

'இது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக்குதல் சம்பவமாகும். இவ்வாறான சம்பவத்தைத் தடுக்கும் செயற்பாட்டிலோ அல்லது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலோ பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தவறியுள்ளார்' என்று தனது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ள நிமல் சிறிபால டீ சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்தின் போது வெளியிடுவதாகவும்' அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .