2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் இராஜினாமா

Gavitha   / 2015 ஜூலை 30 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர், டாக்டர் சோமரத்ன திஸாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதிக்கு அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை  இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தனிப்பட்ட காரணத்தினாலேயே தான் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், ஜனவரி மாதம் 10ஆம் திகதி, அவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .