2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறினார்.

வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின்  அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .