Gavitha / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோசப் அன்டன் ஜோர்ஜ்
ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ளவும் சிறப்பான தேர்தலை முன்னெடுக்க இலங்கை சிறந்த இடமாக உள்ளது என பொதுநலவாயத்தினால் இலங்கையின் தேர்தலை கண்காணிக்க அனுப்பிவைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்தவரும் மால்டா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான எச்.ஈ.ஜோர்ஜ் அபேலா தெரிவித்தார்
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று பதன்கிழமை(12) இடம்பெற்ற, இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பான தமது கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய அமையத்தின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மாவினால் நாங்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.
நாடு முழுவதும் பயணம் செய்த நாங்கள் நேரில் கண்டவற்றையும் பொதுமக்கள், அரசியல்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொலிஸார் ஆகியோருடனான சந்திப்பு, மற்றும் தேர்தல் தொடர்பில் கண்காணிக்கப்பட்ட விடயங்களை பொதுநலவாய அமையத்தின் பொதுச்செயலாளருக்கு அறிக்கையாக அனுப்பி வைப்போம். பின்னர் அவர் பூரணமான உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடுவார்.
இலங்கை தீவானது மிகவும் அழகிய, அமைதியான நாடாக திகழ்வதுடன் ஜனநாயக செயன்முறைகளை முன்னெடுக்க சிறப்பான இடமாகவும் உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்த கண்காணிப்பு பணிகளுக்காக, இலங்கை உட்பட 53 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமையத்தினால் 9 பேர் கொண்ட குழுவினர் இங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த குழுவில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்கள், பொதுமக்களுக்கு நெருக்கமாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊடகத்தை சார்ந்தவர்கள் உள்ளனர்.
மல்டா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி எச்.ஈ.ஜோர்ஜ் அபேலா, அவுஸ்திரேலியாவின் முன்னாள் உதவி தேர்தல்கள் ஆணையாளர் பவுல் தேசே, இந்தியாவின் முன்னால் தலைமை தேர்தல்கள் அதிகாரி நவீன் சௌலா, கென்யாவைச் சேர்ந்த தாராளவாத ஜனநாய கட்சியின் முன்னாள் தலைவரும் பலகட்சி ஜனநாயக நிலையத்தின் தலைவரான லோரன் கும்பே, மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையாளரான பேராசிரியர் அய்ஷா பிடின், நைஜீரியாவின் மாற்றத்துக்கான கண்காணிப்பு குழுவின் தலைவர் சிகிருல்லாஹி இப்ராஹிம், பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புஷ்ரா கோபார், தாய்லாந்து மற்றும் டேபாகோ நாடுகளின் தொடர்பாடல், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு நிபுணர் அதெல்லா ரூப்சாண்ட் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னாள் இராஜதந்திரி லின்டா ட்ஃபில்ட் ஆகியோர் 9 பேர் கொண்ட கண்காணிப்பு நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
9 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
4 hours ago