2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் இருவர் கொலை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்
 
பொலன்னறுவை, மெதகிரிய பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் நேற்று புதன்கிழமை (12) இரவு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகிரிய பொலிஸார் தெரிவித்தனர். 

46 வயதுடைய சாந்த பீரிஸ் மற்றும் 30 வயதுடைய டி.எம்.சமந்த குமார ஆகிய இருவருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக மெதகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாகவும் மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்த மெதகிரிய பொலிஸார், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .