Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டுகான பொதுத்தேர்தலுக்காக 35 அரசியல் கட்சிகளிலிருந்தும் 200 சுயேட்சை குழுக்களிலிருந்தும் மொத்தமாக 6,151 வேட்பாளர்கள், 196 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர்.
இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் 12,314 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள், வட மாகாணத்திலுள்ள 7 சிறுதீவுகளும் உள்ளடங்குகின்றன.
தேர்தல்கள் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் 15,440,491 மக்கள் இம்முறை வாக்களிப்புக்கு தகுதியுடையோராக உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 70,549 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 4,825 விசேட அதிரடிப்படையினரும் 7,000 சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .