2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிக்கான அறிகுறிகள் தென்படுகிறது: அநுர

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கண்கவர் வெற்றியொன்றைப் பெறுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுவதாக அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மருதானையிலுள்ள அபயசிங்கராமையில் தனது வாக்கைச் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதைத் தெரிவித்ததோடு, இந்தத் தேர்தல் முக்கியமானதொரு தேர்தல் எனவும் குறிப்பிட்டார். 

'மக்களுக்கு மாற்றமொன்று தேவைப்படுகிறது. கடந்த 67 வருடங்களில் மேற்கொண்ட தெரிவுகளை விட வேறான தெரிவுகளை மேற்கொள்வதற்கு மக்கள் துணிய வேண்டும். ஜே.வி.பி.யில் மக்களால் முதலிடப்பட்டுள்ள சக்தியானது மக்களின் சக்தி என நான் நம்புகிறேன்' என அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .