2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இடதுசாரிகள் இன்று சந்திப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனங்கள்; தமக்கு கிடைக்காதமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் சிலவற்றின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தை, இன்று திங்கட்கிழமை (24) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசியரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியலில் ஆசனம் வழங்குவதாக தமக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொடுத்த வாக்குறுதியை அக்கட்சி மீறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள 12 தேசிய பட்டியல் ஆசனங்களில் 7 ஆசனங்கள், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .