Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள பேஸ்புக், இணையளத்தளங்கள், ஏனைய சமூக வலைத்தளங்கள் போன்ற அனைத்தும், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, இலங்கையில் அவற்றை தடை செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.பி டலஸ் அலகப்பெரும, “கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து, கடற்படைத் தளபதியால் ஊடகவியலாளர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இதற்கு நல்ல உதாரணமாகும். செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமே, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆதரவு வழங்கியவர்களையே ஒடுக்குவதற்கு, இந்த அரசாங்கம் முயல்கின்றது” என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தின் 58 எம்.பிகளுக்கு தவணை முறையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே, கையொப்பம் இடுவதற்கு மறுத்தமைக்கு, ஒன்றிணைந்த எதிரணி, பாராட்டுத் தெரிவித்தது.
“இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவேண்டும் இல்லையேல்,இராஜிமானா செய்ய வேண்டும் என்று, பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படுவதற்குப் பதிலாக, அவர் இதற்கான கையொப்பத்தை இடுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஓர் அரச உத்தியோகத்தர் என்ற வகையில், அவருடைய கடமைக்குப் பாராட்டுத் தெரிவிக்கின்றோம்” என்று, டலஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago