2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

"2050இல் வடபகுதிக் கரையோரத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படலாம்"

Suganthini Ratnam   / 2010 ஜூலை 09 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றாடல் பல வழிகளிலும் மாசடைந்து வருகின்ற வேளையில் காலநிலை மாற்றங்கள், உலகம் வெப்பமடைதல் போன்ற காரணங்களினால் 2050ஆம் ஆண்டு வடபகுதியில் கரையோர மாவட்டங்களில் குரிநீருக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்படப்போகின்றதென சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ஹேமந்த விதானகே தெரிவித்தார்.

இன்று வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு மனிதனும் சுற்றாடல் பற்றி சிந்திப்பது அவசியமானதெனவும் வலியுறுத்தினார்.

நமது நாட்டில் யானைகள் பெரும் சொத்தாகும். ஆனால், வருடமொன்றுக்கு 200 யானைகள் அழிக்கப்படுகின்றது. சட்டவிரோத மண் அகழ்வு, வீதி அபிவிருத்தியும் சுற்றாடலை பாதிக்கின்றது. சூழலை அனுபவிக்கும் உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் சட்டங்கள் உள்ளதெனவும் ஹேமந்த விதானகே கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--