2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

21 பல்கலைக்கழக மாணவர்களின் பிணை குறித்து திங்களன்று தீர்மானிக்கப்படும்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேருக்கும் பிணை வழங்குவது தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றம் நவம்பர் 8 ஆம் திகதி திங்கட்கிழமை தீர்மானிக்கவுள்ளது.

கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு  மேற்படி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இம் மாணவர்களுக்கு  பிணை வழங்குவது தொடர்பான மனு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.வி. தவராசா, 21 மாணவர்களுக்கும் பிணை வழங்கக் கோரி, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் தாக்கப்பட்ட மனு கடந்த வெள்ளிக்கிழமை நிராகரிக்கப்பட்டதாகவும் அதையடுத்து திருத்தப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

அரச சட்டத்தரணி யொஹான் லியனகே, இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை அடுத்த விசாரணை நடைபெறும் தினத்தில் பொலிஸார்  சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அன்றைய தினம் 21 சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவிடுமாறும் கோரினார்.

அதையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர அடுத்த விசாரணையை நவம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X