2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்தும் 12 பேர் காணாமலும் போயுள்ளனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 282,953 குடும்பங்களை சேர்ந்த 1,056,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 33,920 பேர் முகாம்களில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 584 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

3,737 வீடுகள் முழுமையாகவும் 19,356 வீடுகள் பகுதியளவிலும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--