Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் தென்னைமரவாடி பிரதேச மக்கள் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்திருந்தனர். அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்... 'எங்களுக்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் கிடையாது. யுத்த சூழ்நிலையால் தங்களுடைய நிலங்களை இழந்த மக்கள், தங்களுடைய ஆதாரங்களை சமர்ப்பித்தால் அவர்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம். யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கும் சிங்கள மக்கள் தங்களுடைய இருப்பிட ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும். அதேபோல் ஆதாரங்களை சமர்ப்பித்த தென்னைமரவாடி மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறோம். அவர்களுடைய மீள்குடியேற்றம் வெகுவிரைவில் நடைபெறும்..' என்று குறிப்பிட்டார்.
'அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம்களின் காணிகளினூடாக 'யானை வேலிகள்' அமைக்கப்பட்டுவருவதாகவும் இதனால் சிறுபான்மை மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. இதுதொடர்பான முறைப்பாடுகள் இப்பொழுதுதான் எனக்கு கிடைத்திருக்கின்றன. எனவே இவ்விடயம் தொடர்பாக உரியவர்களிடம் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்...' எனவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்மிரருக்கு மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago