2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சிறுபான்மை கைதிகள் உட்பட பலியான 27 கைதிகளின் விபரம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த 27பேருமே கைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அந்த 27பேரினதும் பெயர் விபரங்களை பொலிஸ் தரப்பு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமாள் என்ற தமிழ்க் கைதியொருவரும் அடங்குகின்றார். அத்துடன் முஸ்லிம் கைதிகள் மூவரும் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இந்த 27பேரினதும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 22பேரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அச்சடலங்களை இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களின் விபரங்கள் வருமாறு,

01.    தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)

02.    கமகே சமந்த பெர்ணான்டோ

03.    குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)

04.    தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)

05.    ரணசிங்க ஆரச்சிகே ஜனக லசந்த (ஹொரண)

06.    அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)

07.    திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிஸை)

08.    ராமநாதன் பாலபெருமாள் (பண்டாரவளை)

09.    அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)

10.    மலிந்த நிலேந்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)

11.    ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும் மஞ்ஜு ஸ்ரீ (பிளியந்தலை)

12.    நிர்மல அத்தபத்து (பிளியந்தலை)

13.    துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)

14.    சுசந்த பெரேரா (ரத்மலான)

15.    மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)

16.    மலித் சமீர பெரேரா எனும் கொன்ட அமித் (தெஹிவளை)

17.    திஸ்ஸ குமார (கேகாலை)

18.    லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)

19.    சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)

20.    வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார

21.    வல்லகே லலந்த விஜேசிறி (காலி)

22.    ரத்னவீர படபெதிகே லெஸ்லி (காலி)

23.    சரத் விஜேசூரிய (கல்கமுவ)

24.    சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)

25.    மொஹமட் ரம்சதீன் நௌபர் (அக்கரைப்பற்று)

26.    கன்னலு பெருமாரச்சிலகே பிரியந்த (கரந்தெனிய)

27.    லியனாரச்சிகே அநுர (பொரளஸ்கமுவ)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .