2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 27 முதல் தேர்தல் திணைக்களத்தில் சர்வகட்சி செயலகம்

Super User   / 2011 ஜூன் 19 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சாந்தனி கிரிந்த)

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 64 உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்காக, தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்தில் இம்மாதம் 27 ஆம் திகதியிலிருந்து சர்வகட்சி செயலகமொன்று இயங்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட 64 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதற்குமுன் தேர்தல் தினத்தில் மாத்திரமே இத்தகைய சர்வகட்சி செயலகம் இயங்கியது. எனினும்  இம்முறை ஜுன் 27 ஆம் திகதியிலிருந்து தேர்தலின் பின்னர் இருவாரகாலம் வரையும் இச்செயலகம்இயங்கவுள்ளது.

இதன்மூலம் தேர்தல் தினத்தில் மாத்திரமல்லாமல்  தேர்தல் பிரசாரக் காலத்திலும் தேர்தலின் பின்னரும் தேர்தல் வன்முறைகளை கட்சிகளின் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

 தேர்தல்கள் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

(சண்டே டைம்ஸ்)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .