Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூன் 21 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் 'பொரின் பொலிஸி' (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் "தோல்வியடைந்த நாடுகளின் சுட்டெண் 2011" எனும் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3 ஆவது இடத்திலும் உள்ளன.
இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12 ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25 ஆவது இடத்திலும் நேபாளம் 27 ஆவது இடத்திலும் உள்ளன. 60 நாடுகளைக்கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க நாடுகளாகும்.
இலங்கை தொடர்பான குறிப்பில் '2010 ஆம் ஆண்டின் சர்வதேச நெருடிக் குழுவின் அறிக்கையின்படி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மீது எறிகணை வீசுவதிலும் ஏனைய அக்கிரமங்களிலும் தங்கியிருந்தது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'கடந்த வருடத்தில் கடைசியாக வெளியான புள்ளிவிபரங்களின்படி 327,000 பேரில் சிலர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர் ' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க பிளவுகள் இன்னும் நிலவுகின்றபோதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் கடந்தகாலத்தை மறக்க ஆர்வம்கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு: தோல்வியடைந்த நாடுகளின் சுட்டெண் 2011
ajan Tuesday, 21 June 2011 09:45 PM
அடுத்த முறை இது முதல் இடத்தில் வந்து நிக்கும்.
இந்த மாதிரி விடயங்களில் நாங்க தான் முதல் இடம் என்று போட்டி போட்டுகொண்டு அரசாங்கம் செயல்படுகிறது. வாழ்த்துக்கள்
Reply : 0 0
asker Tuesday, 21 June 2011 11:16 PM
பரவாயில்லை எங்களுக்கும் பின் எத்தனையோ பேர் இருகிறார்கள் ,அடுத்த வருடம் நாம் இந்த பட்டியலில் இருந்து வெளி ஏறுவோம் ,புலி தொல்லை இல்லையே!!!!!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
42 minute ago
2 hours ago