2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

3 நாட்களுக்குள் தீர்வின்றேல் மீண்டும் பகிஷ்கரிப்பு: தாதி உத்தியோகஸ்தர்கள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(நபீலா ஹுசைன்)

சுகாதார அமைச்சு 3 நாட்களுக்குள் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்காவிட்டால், பிரதான  வைத்தியசாலைகளில் தாதி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடருமென்று அரசாங்க தாதி உத்தியோகஸ்தர் சங்கம் இன்று தெரிவித்தது.

இது தொடர்பில் அரசாங்க தாதி உத்தியோகஸ்தர்  சங்கத்தின் செயலாளர் நாலக ஹெட்டியராய்ச்சி மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சினால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதவிடத்து,  கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட தாதி உத்தியோகஸ்தர்;களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடரும் என்றார்.  ஹம்பாந்தோட்டை மற்றும் களுபோவிலை வைத்தியசாலைகளிலிருந்து 34 தாதி உத்தியோகஸ்தர்;களின் இடமாற்றத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியே இந்;த பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாகவே தமது சங்கத்திலிருந்து தாதி உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணமென்று தெரிவிக்கப்பட்டது.

தற்காலிகமாக  இந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்; தாதி உத்தியோகஸ்தர்;கள் தமது புதிய பதவிகளை பொறுப்பேற்கவில்லையெனவும் அவர் கூறினார்.

தாதி உத்தியோகஸ்தர்  சங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, தாதி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றத்தை வாபஸ் பெறப்படுவதே ஒரே தீர்வு. ஆனால், இதற்கான சரியான தீர்வொன்று முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் தாம் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வோம் என்றார் அவர்.  

மாத்தறை, கராப்பிட்டிய, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, களுபோவிலை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் முன்னர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--