2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணம் படையினர் வசமாகி 3 ஆண்டுகள் நிறைவு

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணம் முழுமையாக படையினரால் விடுவிக்கப்பட்டு நாளை மறுதினம் 19ஆம் திகதி 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகிதியே கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டது.

வாகரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து கொக்கொட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு போன்ற புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை படையினர் கைப்பற்றியதுடன், கிழக்கு படையினரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

கிழக்கு மாகாணம், படையினரால் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட 3 ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணத்தில் பல சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--