2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் திறந்த பல்கலைக்கழகத்தின் 30ஆவது ஆண்டு விழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 30ஆவது ஆண்டு நிறைவுவிழா  மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக இரு நாள்கள் கொண்டாடப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக இலங்கை திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஜே.லியனகம கலந்து கொண்டார்.

இலவச சட்ட உதவி முகாம், கண்காட்சி, மாணவர்களுக்கிடையேயான வினா விடைப் போட்டி, பெற்றோர்களுக்கான செயலமர்வு, இலவச மருத்துவ முகாம், மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு, வீதி நாடகம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இரு நாள்களும் இடம்பெற்றன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத் தலைவர் கலாநிதி ஜயந்தவட்ட விதானகே, பல்கலைக்கழக மட்டக்களப்பு வளாக பிராந்திய அதிகாரி ஏ.டி.கமலநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பலரும் இதில்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--