2025 ஜூலை 12, சனிக்கிழமை

30 இலட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் மிரிஹானையில் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

30 இலட்சம் ரூபாவினை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை மிரிஹானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மோசடி தொடர்பாக மிரிஹானை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற 10 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். (M.M)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .