2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

4 நாட்களில் 352 விபத்துக்கள்: 30 பேர் பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 10 ஆம் திகதி முதல் புத்தாண்டு பிறக்கும் வரையில் 352 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 30 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜய வருட பிறப்பிற்கு முதல் நாளான ஏப்ரல் 13 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 63 விபத்துகளில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட செயற்றிட்டம் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டத்தின் ஊடாக 14 ஆம் திகதி 780 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.  Comments - 0

  • simsar Tuesday, 15 April 2014 05:08 AM

    kattayam antha sarathihalai thandithu matravarhalukku oru munmathirayaha vaikka veandum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--