Menaka Mookandi / 2011 ஜனவரி 21 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை ஊடாக பயணிக்கும் தனியார் பஸ்களில் பணம் கொள்ளையில ஈடுபட்டு வந்த கொள்ளைக் கோஷ்டியொன்றைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்களை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இப்பகுதி ஊடாக பயணிக்கும் தனியார் பஸ்களில் பணத்தை திருடுவதற்காக பிரதான சந்தேக நபருடன் 9 பேர் கொண்ட மூன்று குழுக்கள் செயற்பட்டு வருகின்ற நிலையிலேயே அவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி கொள்ளையர்களால் தம்புள்ளை ஊடாக பயணிக்கும் பஸ்களில் ஒரு மணித்தியாலத்திற்கு 3,200 ரூபா பணம் சேகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கின்றனர்.
இதனையடுத்து அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், தம்புள்ள பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து மூன்று சந்தேக நபர்களையும் அவர்களுக்கு தலைவராகச் செயற்பட்டவர் என்ற சந்தேகத்தில் மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
53 minute ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
02 Jan 2026