2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

5ஆம் ஆண்டு புலமை பரீட்சை மாணவர்களுக்கான கருத்தரங்கு

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் 5ஆம் ஆண்டு புலமைப்  பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு இன்று மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.

215ஆவது இராணுவ  பிரிகேற் பொதுத் தொடர்பு அதிகாரி நலிந்த மகாவிதான, அடம்பன் இராணுவ பிரிவு 2ஆம் அதிகாரி மேஜர் சாலங்க ரந்தெனிய, அடம்பன் ம.ம.வி. அதிபர் எம்.கிறிஸ்ரியான் ஆகியோர் இணைந்து அடம்பன் ம.ம.வித்தியாலயத்தில் இக்கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கருத்தரங்கில் மடு வலயத்தை சேர்ந்த 29 பாடசாலைகளிலிருந்து 401 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கருத்தரங்கில் மடு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் அ.பத்தினாதன் குருஸ், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் வட மாகாண இணைப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கைநூல்களும் வழங்கப்பட்டன.
-Mark Anand

  Comments - 0

  • s k gunarasa Sunday, 11 July 2010 06:05 PM

    இவை ஏன் ஒளிந்து கிடக்கின்றன

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .