2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

50ஆயிரம் வீடுகளுக்கான பணம் இலங்கை தமிழர்களின் வங்கி கணக்கில் - ப.சிதம்பரம்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 50ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினூடாக வழக்கப்படுவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணம்  நேரடியாகச் செலுத்தப்படவுள்ளதாக  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அறிவிக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்தியா-இலங்கைக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த மாதிரி நகலை கருணாநிதியிடம் கையளித்துள்ள ப.சிதம்பரம், இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.1,000 கோடி செலவில் 50,000 வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கான பணம், இலங்கை அரசாங்கத்தினூடாகவன்றி பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு சம உரிமைகளும் மீள் குடியேற்றமும் விரைவில் கிடைத்து விடும் என தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களுக்கான புனரமைப்பு பணிகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக மிகக் குறைந்த வட்டியுடன் 800 மில்லியன் டொலர்களையும் இந்தியா கடனாக வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சிதம்பரம் முதல்வரிடம் குறிப்பிட்டுள்ளார்.  Comments - 0

  • xlntgson Sunday, 13 June 2010 09:05 PM

    எதை இந்தியாசெய்தாலும் அதை சந்தேககண் கொண்டுதான் பார்ப்பார்கள். இந்தியா நூறுகோடி உதவி என்றால் சீனா முன்னூறுகோடி உதவியாம், வெங்காயம் சீனாவில்இருந்து வரும்போது நாறிப்போய்விடும். ஏட்டிக்குப்போட்டி பேசுவதில் இப்போது எல்லாரும் மும்முரமாக இருக்கின்றனர், சீனஒப்பந்தங்கள் கைஎழுத்தாகிவிட்டன. ஆனால் யாராவது விபரம் கேட்டார்களா, இந்தியஒப்பந்தத்தை வெளியிடு பாராளுமன்றில் சர்ச்சைக்கு விடு என்கிறார்கள். இந்தியா என்றாலே பயமும்பீதியும் சிலருக்கு, அமெ. ஐரோப்பிய உறவுகள்தான் இவர்களுக்கு உறவுகள். இந்தியா தொப்புள்கொடி மட்டும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .