Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .
இதன் காரணமாக இன்று காலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புகையிரதமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் நான்கு புகையிரத பெட்டிகள் குடைசாய்ந்து பாரிய அளவில் சேதமடைந்துள்ளன.
இவ்விபத்தினால், கொட்டகலை அறுபது அடி பாலத்துக்கும், ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பாரிய அளவில் தண்டவாளங்கள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. புகையிரத பெட்டியின் பாகங்கள், இரும்புடன் மோதி வீதியின் இரு புறங்களிலும் வீசி எறியப்பட்டுள்ளன.
இவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வரும் புகையிரதங்கள் ஹட்டன் வரையும் பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் வரும் பயணிகளை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் பயணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
தற்போது துரித கதியில் பாதையை சீர்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
4 minute ago
9 hours ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 hours ago
16 Oct 2025