2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

600சீசீ மோட்டார் ஓடிய மூவருக்கு ரூ.9,000 தண்டம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மலே வீதி போக்குவரத்து பொலிஸுக்கு சொந்தமான 3.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய 600 சீசீ மோட்டார் சைக்கிளை களவாக எடுத்துச்சென்ற குற்றத்தை ஒப்புகொண்ட 3பேரும் அரசசெலவாக தலா 3000 ரூபாய் செலுத்த வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் பிரபல காப்புறுதி நிறுவனம் மற்றும் அரச கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊழியர்களாவர்.

இவர்கள் அரசாங்க சேவையிலிருப்பதை கவனத்திலெடுத்த நீதவான், அவர்களுக்கு ஆகக் குறைந்த பட்ச தண்டனை விதித்தார்.

மலே வீதி, பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அண்மையில் தனக்கு கொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை மலே வீதியில் நிறுத்திவைத்தபோது களவு போய்விட்டதாக ஒக்டோபர் 2ஆம் திகதி மலே வீதி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

ஆயினும் மோட்டர்சைக்கிளை எடுத்துச்சென்றவர்கள் அதே இடத்தில் கொண்டுவந்து விட்டிருந்தனர்.

கவனயீனம் என்று பதவிநீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் இதுவரை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .