2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

'600 ரூபா சம்பள உயர்வு அரை அரச நிறுவன ஊழியர்களுக்கு உரியதல்ல'

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஜயசேகர)

2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட 5 வீத சம்பள அதிகரிப்பு அல்லது 600 ரூபா வாழ்க்கைச் செலவுப்படி அரை அரச நிறுவனங்களில் கடமையாற்றும் 3,10,000 ஊழியர்களுக்கு உரியதல்ல என தொழில் அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார்.

மேற்படி சம்பள அதிகரிப்பை கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள், சபைகள் என்பவற்றின் ஊழியருக்கு வழங்குவதா இல்லையா என அந்தந்த நிறுவன முகாமைத்துவமே தீர்மானிக்க வேண்டும்.

இந்த ஊதிய அதிகரிப்பை வழங்கும்படி அரசாங்கம், அரை – அரசாங்க நிறுவனங்களையோ தனியார் நிறுவனங்களையோ கேட்டுக்கொள்ளாது என அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் தனியார்த்துறையை சேர்ந்த 2.2 மில்லியன் ஊழியர்களுக்கு 43 சம்பள நிர்ணய சபைகள் ஊடாக 20 வீதம் சம்பள அதிகரிப்பு கடந்த வருடம் பெற்றுக்கொடுத்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--