Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
கொழும்பிலுள்ள வங்கியொன்றில் லலித் கொத்தலாவலவின் பெட்டகத்திலிருந்து 6.5 கோடி பெறுமதியான நகைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
இந்நகைகள் லலித் கொத்லாவலவினாலோ அவரின் மனைவியினாலோ பிரகடனப்படுத்தப்படாதவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நகைகளில் வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் பெறுமதியான கற்களும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித அமரசிங்க தெரிவித்தார்.
கோட்டை நீதவானிடமிருந்து பெற்றுக்கொண்ட உத்தரவுக்கிணங்க இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வைப்பாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுப்பதற்காக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்படுத்தப்பட்ட நிதியத்திற்கு மேற்படி நகைகள் அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago