2021 மார்ச் 04, வியாழக்கிழமை

7 அனகொண்டாக்களை வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலங்கு பரிமாற்று நிகழ்ச்சி திட்டத்தின்  கீழ் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு சொந்தமான 7 அனகொண்டா பாம்புகள் இந்தியாவிலுள்ள திருவானந்தபுரம் நகர மிருகக்காட்சிசாலைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளதாக இந்திய ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

2 வயதுடைய ஆண் பாம்பு ஒன்றும் 3 வயதுடைய பெண் பாம்புகளுமே இவ்வாறு அனுப்பப்படவுள்ளன.

இவை எதிர்வரும் 9ஆம் திகதி சரக்கு பெட்டி ஒன்றுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
 
சென்னையில் தென் பிராந்திய விலங்கு சோதனை தடுப்பு மைய அதிகாரிகள் இப்பாம்புகளை மேற்பார்வை செய்யவுள்ளனர்.

'பாம்புகளின் ஆரோக்கியம் சார்ந்த மருத்துவ அறிக்கைகள்  சென்னை நகர மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  விலங்கியல் பூங்கா மிருக வைத்தியர் ஜேகப் அலக்ஸான்டர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .