2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இராணுவ நீதிமன்றம் குறித்த வழக்கு விசாரணை டிசெம்பர் 9வரை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள நீதிமன்றம் என்ற சொற்றொடர் இராணுவ நீதிமன்றையும் உள்ளடக்குமா என்பது தொடர்பான யாப்பு விளக்கத்தை தரும்படி உயர் நீதிமன்றத்தைக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றம் செய்த மனு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் அரச வைபவமொன்றில் கலந்துகொள்ள சென்றதினால் நீதிபதி குழாமில் ஏனைய அங்கத்தவர்கள் இந்த வழக்கு விசாரணையினை ஒத்திவைத்தனர்.

தன்னை நாடாளுமன்ற செயற்பாடுகளில் கலந்துகொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சகல உரிமைகளையும் அனுபவிக்கவும் கோரி முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை, யாப்பின் கருத்துப்படி இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றம் ஆகுமா என்பதை தீர்மானிக்கும் வரை நிஜறுத்தி வைக்கும் படி உயர்நீதிமன்றத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .