2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

'அத்தகொட்டா' உட்பட 9 பேர் அடையாள அணிவகுப்பில் இல்லை

Kanagaraj   / 2013 ஜூலை 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெரணியகலை நூரி தோட்டத்துறை நிஹால் பெரேரா கொலைத்தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 சந்தேகநபர்களில் அத்தகொட்டா உட்பட 9 பேர் தவிர ஏனையவர்களை குழுவாக அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பிரகாரம் சந்தேகநபர்கள் நால்வர் இன்று ஆஜரப்படுத்தப்பட்டனர். அதில் மூவரை சாட்சியாளர்கள் ஒன்பது பேர் இனங்கண்டனர்.

சந்தேகநபர்களில் பெரியசாமி கருப்பையா, சுப்ரமணியம் மகேந்திரன் மற்றும் பெருமாள் ரவிகுமார் ஆகியோரே இன்று இனங்காணப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபரான சரத் விஜயசிறி என்பவர் இனங்காணப்படவில்லை.

சந்தேகநபர்களில் இன்னும் நால்வரை எதிர்வரும் நாளை செவ்வாய்க்கிழமையும், இன்னும் நால்வரை புதன்கிழமையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (படங்கள்: ஜெயமல் சந்தரஸ்ரீ)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--