2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஊடகத்துறை " வழிகாட்டலை" அறிமுகப்படுத்த அரசு திட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பத்திரிகையாளர்களின் தொழில்சார் தன்மையை விருத்தி செய்யும் நோக்கில், ஊடக ஒழுக்கக் கோவைக்கு அமைய ஊடகத்துறைக்காக "வழிகாட்டல்" ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது. ஆயினும், இந்த வழிகாட்டல்கள் கடுமையான கட்டுப்பாட்டு முறையொன்றாக அமையாது என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, அரசாங்கம் ஊடக விருத்தி அதிகார சபையொன்றை நிறுவப் போவதாக கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த அதிகார சபையிடம் கடுமையான கட்டுப்பாட்டு பொறிமுறைகள் எதுவும் காணப்பட மாட்டாது என்றும் இது ஊடக ஒழுக்க நெறியையும் தொழில்சார் தன்மையையும் ஊடகவியலாளர்களின் திறமையையும் ஊக்குவிப்பதற்கான வழகாட்டலாகவே அமைந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டம் அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகார சபை என்ற சொல் கட்டுப்படுத்தும் அமைப்பு என்று விளங்கச் செய்யலாம். ஆனால் இது அப்படியல்ல. ஊடகத்துறையின் தொழில்சார் தன்மையை விருத்தி செய்வதே இதன் நோக்கம் என்று அமைச்சர் கெஹெலிய விளக்கமளித்தார்.

இதேவேளை, வரப்போகும் இந்த புதிய அமைப்பிற்கான ஆரம்ப வரைவை தயாரிக்குமாறு  அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--