2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

"மொபெட்ஸ்" மோட்டார் சைக்கிள் செலுத்த புதிய விதிமுறை

Super User   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சக்தி வலு குறைந்த மொபெட்ஸ் மோட்டார் சைக்கிள்களினால் அதிகமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக புதிய சட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் பி.டி.எல்.தர்மபிரிய டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அதிகளவான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் 49 சீ.சீ. மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படுவதாகவும் இந்த வாகனங்களை எதிர்காலத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் 49 சீ.சீ. மொபெட்ஸ் மோட்டார் சைக்கிளை ஒட்டுவதற்கு தலைக்கவசம் அணிவதுடன் சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருக்க வேண்டும் எனும் விதிமுறையை இறுக்கமாக அமுல்படுத்தவுள்ளதாகவும் இதை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0

  • asaf Tuesday, 17 August 2010 04:07 PM

    வெரி வெரி நல்லம். இததான் அப்போவே சொன்னேன்.

    Reply : 0       0

    KI Tuesday, 17 August 2010 08:03 PM

    இதிலுமா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .