Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை கூறியுள்ளார்.
எட்டாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (03) ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
8 minute ago
17 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
22 minute ago
1 hours ago