ஆர்.மகேஸ்வரி / 2018 மார்ச் 22 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஸ்கோவில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஸவுக்கு அனுமதி வழங்கப்படாமைக் காரணமாக,மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற ரஷ்யாவின் ஜனாதபதித் தேர்தலை சுயேட்சை கண்காணிப்பாளராக கண்காணிக்கச் சென்ற போதே, இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
“ எமிரேட்ஸ் விமான நிறுவன அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் விடுத்தமையாலேயே, தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தான், இலங்கையின் எதிர்கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் மொஸ்கோவில் இருந்து அமெரிக்க செல்ல நினைக்கவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
எனினும், தனக்கு அனுமதி வழங்காமைக்கான காரணத்தை இதுவரை தனக்கு அறிவிக்கவில்லையென்றும் நாமல் பதிவிட்டுள்ளார்.
5 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago