2026 ஜனவரி 14, புதன்கிழமை

’அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது’

Editorial   / 2020 மே 09 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அதனை ஜனாதிபதி செயலாளரின் தனிப்பட்ட கோரிக்கையாக கருத முடியாதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது  தேர்தலை நடத்த அரசாங்கம் முற்படும் நிலையில் இவ்வாறு அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை கேட்பது தேர்தலுக்கான செலவீனத்தை ஈடு செய்யவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .