2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

‘ஆயுதங்களை கையளிக்க அவகாசம்’

S. Shivany   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பாதாளக் குழுக்களின் செயற்பாட்டை முற்றாக ஒழித்து, நாட்டில் அச்சமின்றியும் சந்தேகமின்றியும் வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாதாள குழுவினர் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, இது பாதாள குழுவினருக்கான இறுதி எச்சரிக்கை எனவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாட்டில் எவரேனும் கப்பம் கேட்டால்  அதனை வழங்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன்,  கப்பம் கோருவோரின் பெயர் விபரங்களை தெரியப்படுத்துமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாட்டில் போதைப்பொருள் விற்பனைச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் அந்தச் செயற்பாட்டை  கைவிட வேண்டுமென எச்சரித்துள்ள அவர், மாற்று தொழில் வாய்ப்பை தேடி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .