Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கொட்டுவ- மோருக்குள்ளி பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகளில் கலந்துகொண்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஒன்று கூடலைத் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகள் இடம்பெறுவதாக தங்கொட்டுவ பொது சுகாதார பரிதோகர்களுக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், அதற்கமைய, குறித்த இடத்துக்கு பொது சுகாதார பரிசோதகர்களுடன் தங்கொட்டுவ பொலிஸாரும் சென்ற போது, அங்கு எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளுமின்றி ஆராதனைகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதில் கலந்துகொண்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு, கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
44 minute ago
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
3 hours ago