2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது

Nirosh   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்லக்கதிர்காமத்தில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித போகொல்லாகமவின் விடுமுறை விடுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த அந்த விடுதியின்  4 இலட்சம் பெறுமதியான சொத்துக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த விடுதிக்குப் பொறுப்பான காவற்காரர் விடுமுறையில் சென்றிருந்த நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுத் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் கொள்ளையிடப்பட்டப் பொருள்கள், கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .